இருபதுக்கும் மேற்பட்ட கண்காட்சிகள் , ஐந்திற்கும் மேற்பட்ட விருதுகள் , உலக நாடுகளின் சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்கள் , பயிலரங்கங்கள் , இலக்கியம், ஊடகம் எனத் தொடரும் பயணங்கள் ஓவியர் மாணிக்கவாசகத்தின் அடையாளங்கள். பிரமிக்க வைக்கும் இவரது கோட்டோவியங்கள் இதுவரை காட்சிப்படுத்தாத பொக்கிசங்கள். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் யில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் மாணிக்கவாசகம் உடுமலைப்பேட்டை பிறப்பிடமாக கொண்டவர். மாணிக்கவாசகம் ஒரு வண்ணப் பிரியர். கலைமீது எற்பட்ட காதலால் தனது தகவல் தொடர்புத்துறைப் பணியை துறந்து சென்னை ஒவியக்கல்லூரியில் தூரிகைக் கற்றவர். பல கண்காட்சிகள்,பயிலரங்குகள் பங்கேற்றும் நடத்தியும் அனுபவம் பெற்றுள்ள இவர் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று ஓவியப்பயண அனுபவங்களை இளையத்தலைமுறைக்கு பகிர்பவர். இவரின் அண்மை படைப்பான பெண்ணியம் சார்ந்த ஓவியங்கள் அரூப ஓவியங்கள் கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைமையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- தூரிகை சின்னராஜ்
No comments:
Post a Comment